நான் ரகுநாதன், சிவில் பொறியாளன், காஞ்சிபுரத்தை சேர்ந்தவன். எனக்கென்று ஒரு பக்கத்தை உருவாக்க வேண்டும், அதில் எனக்கு தெரிந்ததை எழுத வேண்டும் என்று மட்டுமே ஆசை.
பக்க பலமாக இருப்பது வ. மணிகண்டனின் தைரியமான வாசகங்கள். பாப்போம் எந்த அளவுக்கு போகிறதென்று.
எழுதுவது என்று ஆனவுடன் சில முடிவுகள் எடுக்க வேண்டி உள்ளது.
௧. தெரிந்த, தொடர்பில் உள்ள நபர்களை பாதிக்க கூடியதை தவிர்த்தல்.
௨. விவாதம் என்றால் பின் வாங்குதல்.
௩. மற்றவர்கள் கதை என்றாலும், சொல்லும்பொழுது தன்னிலை படுத்த போகிறேன். பல விஷயங்களில் இது நல்லது என்று படுகிறது.
நேரம் நிறைய உள்ளது, பாப்போம்.
எனக்கு ஆகி வந்த எல்லா கடவுளும் உங்கள் எல்லோருக்கும் பிடித்த கடவுளர்களும் துணை நிற்பார்களாக.
நன்றாக போனால் நன்றிகள் சேர வேண்டிய இடம், சுதர்சன், காமாராஜ் மற்றும் வ. மணிகண்டன், தவறு என்றால் என்னை மட்டுமே சாரும்.
நன்றி,
Raghunathan. V. R.